நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்& அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017&ம் ஆண்டும் ஏப்ரல் 24&ந் தேதி இரவு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்த துடன், பங்களாவுக்குள் நுழைந்து பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது.
இது தொடர்பாக சயான், மனோஜ்சாமி, தீபு, சதீசன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகள், மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என இதுவரை 202 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு தனிப்படை அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று அவர் கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள தனி அறையில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் தனிப்படை போலீசார் விச £ரணை மேற்கொண்டனர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 5 மணி வரை 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. விசாரணையின் போது கனகராஜ் உங்களிடம் எத்தனை வருடங்கள் வேலை பார்த்தார்? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவரும் தனக்கு தெரிந்தவற்றை போலீசாரிடம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணை முடிந்து வெளியில் வந்த வி.சி.ஆறுக்குட்டி நிருபர்களிடம் கூறுகையில், கொடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜ் என்னிடம் 1Ñ டிரைவராக வேலை பார்த்ததால் என்னை அழைத்து விசாரித்தனர். வேலையை விட்டு சென்ற பின்னர் அவருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு தெரிந்த உண்மைகளை போலீசாரிடம் தெரிவித்துள்ளேன். இனிமேல் விசாரணைக்கு அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றார் . கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பும் ஆறுக்குட்டியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது