பெற்றோருடன் தூங்கிய ஆண் குழந்தை கடத்தல்.

கோவை மாவட்டம் காரமடை ரயில்வே மேம்பாலம் அருகே வசித்து வருபவர் துரை (வயது 42) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி எலிசபெத் (வயது 24) இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும் 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இவர்களுக்கு வீடு இல்லாத நிலையில் சாலை ஓரத்தில் குடில் அமைத்து வசித்து வருகிறார்கள்.நேற்று முன்தினம் அவர்களுடன் படுத்து தூங்கிய ஆண் குழந்தையை திடீரென்று காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை இது குறித்து காரமடை போலீஸ் நிலையத்தில் துரை புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து தேடி வருகிறார்கள். குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.