கோவை குனியமுத்தூரைசேர்ந்தவர்14 வயது சிறுமி. அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.கடந்த 4-ந் தேதி தனது தந்தைமாதவனுடன் அங்குள்ள பேக்கிரிக்கு சென்றார்.அப்போது பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் எங்கோ மாயமாகிவிட்டார்.இதுகுறித்து தாயார் வள்ளி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் காணவில்லை வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.இந்த நிலையில் அந்த மாணவியை தென்காசிமாவட்டம், புளியங்குடி, சிந்தாமணி அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் ஸ்ரீராம் ( வயது 22) என்பவர் ஆசை வார்த்தை காட்டிகடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது.இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் புளியங்குடிசென்று ஸ்ரீராமையும்,, மாணவியையும் மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர்.மாணவி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அவரை ஆசைவார்த்தை காட்டி கடத்திச் சென்ற ஸ்ரீராம் கைது செய்யப்பட்டார்.இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதற்கு உடந்தையாக இருந்ததாகஸ்ரீராம் தாயார் கலைமணி (வயது 45 ))புளியங்குடி ராஜேந்திரன்ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட ஸ்ரீராம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0