விபசார புரோக்கரை காரில் கடத்தி ரூ. 2லட்சம் கொள்ளை முயற்சி. 3 போலீஸ்காரர்கள் கைது.

கோவை: திருப்பூர் பக்கம் உள்ள கோவில் வழியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவர் நல்லூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தனது கணவரை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகவும், அதில் சிலர் போலீஸ் சீருடை இருந்ததாகவும் தெரிவித்தார் .இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். இதில் கடத்தப்பட்ட நபர் விபச்சார புரோக்கர் என்பது தெரியவந்தது. இணையதளத்தின் மூலம் அவர் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்ததும் ,இதனை அறிந்த 3 போலீஸ்காரர்கள் உட்பட 6 பேர் விபசார தொழில் குறித்து வெளியே சொல்லாமல் இருக்க தங்களுக்கு 2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி தாக்கியதுடன், காரில் அவரை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. திருப்பூர அருகே பெருமாநல்லூர் பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு அவரை கடத்திச் சென்று அங்குள்ள அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர் .அவர் தனது மனைவிக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை மீட்டனர். விபச்சார புரோக்கரை காரில் கடத்தி பணம் பறிக்க முயன்றதாக திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர்கள் சோமசுந்தரம் ( வயது 31 கோபால் ராஜ் ( வயது 33) நீலகிரி மாவட்டம் ,தேவாலா சோலூர் வட்டம்காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் லட்சுமணன் ( வயது 32) என்பதும் தெரிய வந்தது .மேலும் இவர்களின் நண்பர்கள் ஜெயராம் ( வயது 20) ஹாரிஸ் ( வயது 25) அருண்குமார் (வயது 24) ஆகிய 3 பேரும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் 6 பேரையும் நல்லூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் 3 பேரும் 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர்கள். கடத்தப்பட்ட விபசார புரோக்கர் மூலம் சேலம் தர்மபுரி, மற்றும் நாமக்கல் ராசிபுரத்தில் இணைய தளத்தின் மூலம் நடந்து வந்த விபசார தொழில் குறித்து கண்காணித்து அதனை வைத்து மிரட்டி ரூ 2லட்சம் பணம் பறிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. விபசார புரோக்கரை போலீசாரே கடத்தி பணம் பறிக்க முயன்ற சம்பவம் திருப்பூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.