கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் ( வயது 58 )இவர் கடந்த 9 – தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடிவிட்டதுதெரியவந்தது. இது குறித்து முருகன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்து கேரள மாநிலம், மலப்புரம்,திருவல்லி பகுதியைச் சேர்ந்தஅலி (வயது 51) என்பவரை நேற்று கைது செய்தார். இவரிடம் இருந்து நகை மீட்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0