கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதை யடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் அந்த பகுதியில்நேற்று மாலை திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பொள்ளாச்சி நல்லூர் கைகாட்டி அருகே லாட்டரி டிக்கெட் விற்றதாக திண்டுக்கல் நத்தத்தைச் சேர்ந்த தண்டபாணி ( 53 ) கைது செய்யப்பட்டார். 132 லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல வேட்டைக்காரன் புதூரில் லாட்டரி டிக்கெட் விற்றதாக கிருஷ்ணகுமார் (55) சுப்பிரமணி ( 84) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 45 லாட்டரி டிக்கெட் கைப்பற்றப்பட்டது. பொள்ளாச்சி நல்லூர் கைகாட்டி அருகே லாட்டரி டிக்கெட் விற்றதாக பொள்ளாச்சி அழகப்பா காலணியை சேர்ந்த ரியாஸ்கான் (54) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 180 லாட்டரி சீட்டுகள், பறிமுதல் செய்யப்பட்டது
இதேபோல பொள்ளாச்சி ராமபட்டினத்தைச் சேர்ந்த கண்ணன் ( 37 )கைது செய்யப் பட்டார். இவரிடமிருந்து 12 லாட்டரி டிக்கெட்டுகள்பறிமுதல் செய்யப்பட்டது. பெரிய நாயக்கன்பாளையம் சாமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் ( 26 ) என்பவர் அங்குள்ள பஸ் நிலையத்தில் லாட்டரி டிக்கெட் விற்றதாக கைது செய்யப் பட்டார். இதேபோல அங்குள்ள பாரதிநகர் சந்திப்பில் லாட்டரி டிக்கெட்விற்பனை செய்ததாக குமாரபாளையத்தை சேர்ந்த ஆதியன் (25) கைதானார். . 10 லாட்டரி டிக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0