தமிழகத்தில் திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் திண்ணை பிரச்சாரங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொது மக்களிடையே எடுத்துரைத்து வருகின்றனர்.
அதில் 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், மகளிர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விடியல் பயண பேருந்து திட்டத்தில் சராசரியாக மாதம் ரூபாய் 888 சேமிப்பு, 17 லட்சம் பள்ளி குழந்தைகள் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மகளிர் சுய உதவி குழுக்களில் ரூபாய் 2755.99 கோடி கடன் தள்ளுபடி, 1.65 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள், கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4000, ஒரு கோடியே 70 ஆயிரம் பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற பல திட்டங்களையும், 2024 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்கள் பற்றியும் பொதுமக்களிடையே எடுத்துரைத்து வருகின்றனர். அதன்படி திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமையில் கூத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்கிற திமுகவின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார் . மேலும் இப்பகுதி பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை பெற்றுக் கொண்டு விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்தார் இந்நிகழ்வில் கூத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஒன்றிய கவுன்சிலர் அம்பிகாபதி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். ஏராளமான பொதுமக்களை திண்ணைப் பிரச்சாரத்தில் சந்தித்த கதிரவன் எம் எல் ஏ குறிப்பாக பெண்களுக்கு திமுக அரசு செய்த சாதனைகளை விளக்கி கூறினார். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருச்சி செய்தியாளர் H. பஷீர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0