தூத்துக்குடி அருகே சூசை பாண்டியாபுரம் ஊராட்சியில் தொடர் கனமழையால் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தேங்கியுள்ள வெள்ள நீரைப் பார்வையிட்டு, வெள்ள நீரை வெளியேற்றும் பணியைத் துரிதப்படுத்தினார். மேலும், அப்பகுதியிலிருந்த பொதுமக்களுடன் உரையாடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது, மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0