கோவை போத்தனூர் சரக புதிய போலீஸ் உதவி கமிஷனராக கனகசபாபதி பொறுப்பேற்பு.

கோவை மாநகரம் போத்தனூர் சரக புதிய போலீஸ் உதவி கமிஷனராக கனகசபாபதி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன் கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் ராமநாதபுரம்,போத்தனூர்,சுந்தராபுரம்,தெற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலைய பொறுப்புக்களை கவனிப்பார். இவருக்கு இன்ஸ் பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் ,பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.