தேவையான பொருட்கள்
- புதிதாக எடுக்கப்பட்ட ஒரு ஸ்பூன் தயிர்
- சீரக தூள் – கால் ஸ்பூன்
- இந்து உப்பு – அரை ஸ்பூன்
( கண்டிப்பாக இந்து உப்பு தான் பயன்படுத்த வேண்டும் .. நாம் உபயோகிக்கும் அயோடின் கலந்த உப்பு தான் அல்சருக்கு முக்கிய காரணம் என்பதையும் விளங்கி கொள்ளுங்கள் .
செய்முறை
- முதலில் ஒரு ஸ்பூன் தயிர் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு நன்றாக கடைய வேண்டும் .
- பின்னர் கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவேண்டும்
- சீரகத்தை பொன் வருவளாக வறுத்து , நன்றாக பொடியாக்கி வைத்து கொள்ளவும் .
- பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு இந்து உப்பு கலக்க வேண்டும் .
- இந்துப்பு தூளாக வாங்கி கொள்ள வேண்டும் .. இந்துப்பு பொடியை தான் அரை ஸ்பூன் போட வேண்டும் ..
உட்கொள்ளும்முறை
- அல்சர் நோய் ஆரம்பமாக உள்ளவர்கள் இந்த மருந்தை தினமும் காலை , மற்றும் இரவு என இரண்டு நேரம் எடுத்து கொள்ள வேண்டும் .
- காலை இரவு உணவிற்கு பின் 10 நிமிடம் கழிந்த பின் இதை அருந்த வேண்டும் .
- நீண்ட நாட்களாக அல்சர் உள்ளவர்கள் .. இதை ஒரு நாளைக்கு 4 முறை குடிக்க வேண்டும்.
- காலை , மதியம் , மாலை , இரவு
- காலை , மதியம் , இரவு மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு பின்னும் மாலை தேநீர் அருந்த கூடிய நேரத்திலும் உட்கொள்ள வேண்டும் .
- இந்த எளிமையான வீட்டு மருந்தினை ஏழு நாட்கள் தொடர்ந்து எடுக்கலாம் . அதன் பின்னர் வாரம் இரு முறை கண்டிப்பாக எடுக்கலாம் .. ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு முழுமையாக குணமடைய இது ஒன்றே போதுமானது .
தவிர்க்கவேண்டியஉணவுகள் :
எழும்பிச்சை , ஆரஞ்சு , அண்ணாச்சி , திராட்சை , காபி , டீ , கொழுப்பு நிறைந்த உணவுகள் , பால் , ஊறுகாய் , மிகவும் சூடான உணவுகள் , மிகவும் காரமான உணவுகள்
சாப்பிடகூடிய உணவுகள் :
மணத்தக்காளி , புதினா , முட்டைகோஸ் , ஆப்பிள் , மாதுளை , மிகவும் பழுக்காத வாழைப்பழம் , கிரீன் டீ , தயிர் , தேங்காய் பால் , பீன்ஸ் , கொத்தமல்லி இலை