கொலை வழக்கில் கைதாகி ஜாமீன் கேட்ட 2 சிறுவர்களுக்கு நீதிபதி நூதன தண்டனை.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோத்தகிரி சாலையில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்டமோதலில்ஒருவரை 7 பேர் சேர்ந்து கார் ஏற்றி கொலை செய்தனர். இதில்மேலும் ஒருவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த வழக்கில் சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். இதேபோல் அன்னூர் பகுதியில் நடந்த மற்றொரு கொலை சம்பவத்தில் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். இது குறித்த வழக்கு கோவையில் நடந்து வரும நிலையில் 2 சிறுவர்களும்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி 2 சிறுவர்களுக்கும் சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார். அதன்படி 2 சிறுவர்களும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். பின்னர் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதை யடுத்து போக்குவரத்து போலீசார் மேற்பார்வையில் 2 சிறுவர்களும் நேற்று காலை முதல் மேட்டுப்பாளையம் பஸ்நிலையம் அருகில் உள்ள சிக்னலில் நின்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர் .காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 2 பேரும் இந்த பணியை செய்ய வேண்டும் என உத்தரவிப்பட்டுள்ளது..