ஓட்டலில் பெண்ணிடம் நகை – பணம் திருட்டு

கோவை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, அய்யப்பா நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். அவரது மனைவி லட்சுமி (வயது 41) இவர் கடந்து 8 – ஆம் தேதி குடும்பத்துடன் கோவைக்கு சுற்றுலா வந்திருந்தார் .ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர். மறுநாள் அங்குள்ள ஒரு ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட சென்றனர். அப்போது இவரது பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, ரூ 15 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து லட்சுமி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர்அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.