நகை – பணம் கேட்டு மனைவிக்கு வரதட்சனை கொடுமை. கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு.

கோவை கவுண்டம்பாளையம் டிவிஎஸ் நகர் ,சக்திநகரை சேர்ந்தவர் தீபா (வயது 36) இவருக்கும் சென்னையை சேர்ந்த சுமன் என்பவருக்கும் 2021 -ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.. திருமணம் முடிந்த பிறகு தீபா சென்னையில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்,சுமன் குடிப்பழக்கம் உடையவர்.மேலும் சுமன் மற்றொரு பெண்ணிடம் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம். இதனால்அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கணவன் சுமன் ,மாமனார் சுகுமார் ,நாத்தனார் சுபா ஆகியோர் சேர்ந்து தீபாவுடன் நகை -பணம் கேட்டு கொடுமைப்படுத்தினார்கள். இதுகுறித்து தீபா கோவை மத்திய பகுதிஅனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வித்யா விசாரணை நடத்தி கணவர் சுமன், மாமனார் சுகுமார், நாத்தனார் சுபா ஆகியோர் மீதுவரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.