கோவை ராமநாதபுரம், 80 அடி ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி மோகனாம்பாள் (வயது 45)இவர் கடந்த 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் பீரோவில் இருந்த 300 ரூபாய், காமாட்சி வெள்ளி விளக்கு, சிறிய கம்மல் லேப்டாப் செல்போன் ஆகியவற்றை யாரோதிருடி சென்று விட்டனர் .இது குறித்து ராமநாதபுரம் போலீசில் மோகனாம்பாள் புகார் செய்துள்ளார். இதேபோல பூசாரி பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் சுரேஷ்குமார் ( வயது 35) இவர் சென்னையில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 – ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரு சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்தார் அப்போது வீட்டின் முன் கதவுபூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 6 பவுன் தங்க நகைகளை காணவில்லை .இது குறித்து சுரேஷ்குமார் சரவணம்பட்டி போலீ சில் புகார் செய்துள்ளார். இதேபோல குனியமுத்தூர் சுகுணாபுரம் மேற்கு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு (வயது 39) இவர் கடந்த 30 ஆம் தேதி அவிநாசியில் உள்ள உறவினர் விட்டு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டில் மாடி ( டெரஸ்) கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோதுபடுக்கை அறையில் பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகள் , பணம் ரூ 52 ஆயிரத்து 500 ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து பிரபு குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0