திறந்து கிடந்த வீட்டில் நகை -வெள்ளி திருட்டு.

கோவை போத்தனூர் அருகே உள்ள கோணவாய்க்கால் பாளையம், அற்புதம் நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார். இவரது மனைவி உதய ராணி (வயது 33) இவர் நேற்று பள்ளிக்கூடம் சென்ற தனது மகனை அழைப்பதற்காக வீட்டை பூட்டாமல் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த தங்க நகைகள் – வெள்ளி பொருட்களை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து உதய ராணி போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்