முதியவரை கல்லால் தாக்கிய அண்ணன் -தம்பிக்கு சிறை தண்டனை.

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள பெரியகளந்தையைச் சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 60)இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சிவகுமார் ( வயது 35) இவரது அண்ணன் பழனிச்சாமி ( வயது 37) அங்குள்ள தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில் 7- 5 -18 அன்று ஏற்பட்ட தகராறில் சிவகுமாரும், அவரது அண்ணன் பழனிச்சாமியும் சேர்ந்து மயில்சாமியை கல்லாலும், கைகளாலும் தாக்கினார்களாம். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், செல்வராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்துசிவகுமார் பழனிச்சாமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு பொள்ளாச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (எண் 2) நீதிமன்றத்தில் நடந்து வந்தது..நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது .வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாசம் குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 3 ஆண்டு 7மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ 1000 ஆயிரம் அபராதமும், அவரது அண்ணன் பழனிச்சாமிக்கு 4 ஆண்டு ஒரு மாதம்கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.