கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கும் சூழல் ஏற்பட்டது.
ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்வா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர்.இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு முடியும் வரை ஹிஜாப் அல்லது காவித் துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியது.