தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஐ.டி.ஊழியர் கைது.

கோவை பீளமேடுசித்ரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் .அங்கு விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேகாலயாவில் உள்ள அம்ருதீன் ( வயது 24 )என்பவர் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது .இதையடுத்து தனிப்படை போலீசார் மேகாலயா மாநிலம் ஷில்லாங் சென்று அம்ருதீனை கைது செய்து நேற்று கோவைக்குஅழைத்து வந்தனர்.இவர் அங்குள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டு தபால் மூலம் கஞ்சா அனுப்பிகோவைஉட்பட தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.இவர் உடுமலையை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை வழக்கறிஞராக உள்ளார்.