நெல்லை மாவட்டம் ராதாபுரம் பக்கம் உள்ள உருமங்கலத்தை சேர்ந்தவர் உத்தரபாண்டி. இவரது மகன் நாராயணன் (வயது 29 ) இவர் கோவை சரவணம்பட்டி, ஹாஸ்பிட்டல் வீதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.இவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது ஏராளமான குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்த ஒரு பைக் , 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0