கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 26, 27, 28 மற்றும் 29 ஆகிய நான்கு தினங்களில், மாநில அளவிலான உழவர் தின விழா நடைபெற உள்ளது. இதன் நிகழ்வில் தமிழக அரசின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து விழா, நடக்க இருக்கிறது, இக்கண்காட்சியில் ராசி விதை நிறுவனம், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள். வேளாண் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி, சர்வதேச வேளாண் காடுகள் ஆராய்ச்சி மையம், SPIC, தமிழ்நாடு காகிதகூழ் நிறுவனம், சக்தி சர்க்கரை ஆலை, CRI பம்ப்ஸ் நிறுவனம். சேஷசாயி காகிதம் மற்றும் போர்டு லிமிடெட் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியோரும் நிதியுதவி வழங்கயுள்ளனர். இதில் , 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் கண்காட்சியில் இடம் பெறுகிறது, தொழில்நுட்ப விளக்கங்கள், கருத்தரங்குகள், நேரடி பண்ணை செயல் புதிய பயிர் இரகங்கள் மற்றும் பண்ணைக் கருவிகளின் மாதிரித் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலாண்மைத் தொழில் நுட்பங்கள், பயிர் ஊக்கிகள், பூச்சி நோய் எதிர்ப்பு காரணிகள், வேளாண் இடுபொருட்கள், நானோ தொழில்நுட்பங் அறுவடை பின்சார், மற்றும் மதிப்பூட்டல் தொழில்நுட்பங்கள், இடுபொருட்கள், டிஜிட்டல் வேளாண்மை, தானியங்கி நீர்ப்பாசன கருவிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சி நிலையங்கள், கல்லூரிகள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விரிவாக்கச் சேவை நிறுவனங்கள், வங்கிகளுடன் சேர்ந்து நடத்துகிறது,மேலும்,தலைசிறந்த விவசாயிக ளுக்கு வேளாண் செம்மல் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படும் என்றனர், விழாவில் அமைச்சர்கள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர். வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர், மாவட்ட ஆட்சியர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் மாணவ ர்கள் ஆகியோர் பங்கு பெற உள்ளனர். இந்த நிகழ்வை, விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் தொழில் முனைவோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பயன்பெற அழைக்க படுவதாக தெரிவித்தனர், தொடர்ந்து விவசாய கண்காட்சிக்கான அழைப் பிதழை வெளியிட்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0