கோவை,ஒசூர் சாலை,மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகே உள்ள கொடிசியா அலுவலகத்தில், பேப்பர், பிரிண்டிங், பேக்கேஜிங், சார்ந்த ராமேட் 2024 கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது,
இதில் ராமேட் இந்தியா 2024 கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்தும் தலைவர், வி.சரவணகுமார் பேசுகையில் இந்திய நாட்டின் முதன்மையான மூலப்பொருட்கள் மற்றும் வளங்களுக்கான “ராமேட் 2024” தொழிற் கண்காட்சி, வரும் செப்டம்பர் 10,11,12ம் தேதி வரை, மூன்று நாட்கள், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.
தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்கள், மெட்டீரியல் ஹேண்ட்லிங் உபகரணங்கள், தளவாடங்கள் தொடர்பாக நடக்கும் கண்காட்சிகளில் ஒன்றாக “ராமேட் இந்தியா” திகழ்கிறது.இத்தொழில் சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை விற்போரும் வாங்குவோரும் சந்திக்கும் களம், இங்கே உள்ள தொழிற்சாலைகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கண்காட்சி அமையவுள்ளது.
மேலும் கோவையில் ஏராளாமான சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் உள்ளன. இதில் தொழிற்சாலைகள் தரத்துக்கும், துல்லியமான தயாரிப்பு திறனுக்கும் பெயர் பெற்றவை, அதுபோல ஆட்டோமொபைல்ஸ், டெக்ஸ்டைல், இன்ஜினியரிங், பவுண்டரி, எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அடிப்படை கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், விவசாயம், ரயில்வே, வான் சார்ந்தவை, பாதுகாப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆய்வு மற்றும் மேம்பாடு என பல துறை சார்ந்த தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
அந்த வகையில் தொழிற்சாலைகள் பயன்பெறும் வகையில் நடத்தப்பெறும் இந்த கண்காட்சி நாட்டின் முக்கியமான மூலப்பொருட்கள் மற்றும் ஆதார வளங்களுக்கான ஒர் கண்காட்சி ஆகும்இதில் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கோவா, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து பங்குபெறும் பங்கேற்பாளர்கள், தொழிற்சாலைகளும், தேவையான பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர்.
கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, செப் 10,11,12, ஆகிய மூன்று நாட்களும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். கண்காட்சியில் 10.000 பார்வை யாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுவதோடு, இந்த கண்காடசியில் சுமார் 150 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேட் இந்தியா 2024 கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் , சொஜிஸ்டிக்ஸ், வேர்ஹவுசிங் மற்றும் மெட்டீரியல் ஹேண்ட்லிங் துறை சார்ந்த அரங்குகள் பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ,இந்தியா முழுவதும், தமிழ்நாடு மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த 55 அரங்குகள்,20க்கும் மேற்பட்ட நேரடி உற்பத்தியாளர்கள் பங்கேற்க்கினறனர். இச்சந்திப்பில் ஜி.சுரேஷ்குமார், துணைசேர்மன், என்.ஜெகதீஸ், சேர்மன், எம்.கார்த்தி கேயன் கொடிசியா தலைவர், எம்.யுவராஜ் கெளரவ ஆலோசகர், வி.சரவணகுமார், தலைவர், டி.ஸ்ரீதர் துணைசேர்மன், கலந்து கொண்டு அழைப்பு விடுத்துள்ளார்கள்.