சூலூர் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் நாள் கருத்தரங்கம் சூலூர் எஸ் ஆர் எஸ் திருமண மண்டபத்தில் காசு. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இளங்கோவன் வரவேற்புரை ஆற்றினார் . பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் தொடக்க உரையாற்றினார். திராவிட கழக துணை பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் புலவர் செந்தலை ந. கவுதமன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சிற்பி. செல்வராசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். எழுத்தாளர்கள் ஆனந்தி , அனிதா , இனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக சூலூர் பாவேந்தர் பேரவையைச் சார்ந்த பிரபாவதி, ஞானசுந்தரி, சாவித்திரி, மலர்விழி, உமாதேவி, தேன்மொழி, ஆகியோரும் சூலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கிருத்திகா, லலிதா, லலிதாதேவி, சன்மதி வெண்ணிலா, விஜயலட்சுமி, மணிமேகலை , தங்கமணி, கவிதா, சுமதி மற்றும் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி நடராஜன், ராமதிலகம், கௌசல்யா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஜெயக்குமாரி, சாந்தி, முருகேசன், பசுமை நிழல் அரிமா ப . சிவகுமார், மற்றும் திராவிட இயக்க தோழர்கள் தோழியர்கள் திரளாக கலந்து கொண்டனர் சூலூர் நகர செயலாளர் முருகராசு நன்றியுரை கூறினர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0