மாஸ்கோ : ‘அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது’ என, ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா மீது, அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது.இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ் கூறியதாவது:ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் நான்கு அமெரிக்கர்கள், இரண்டு ரஷ்யர்கள், ஒரு ஜெர்மானியர் என ஏழு விண்வெளி வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு தராவிட்டால், சர்வதேச விண்வெளி நிலையத்தை காப்பாற்றுவது யார்? அதை பாதுகாக்க முடியாமல் போனால், 500 டன்னுக்கு மேல் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம், சீனா அல்லது இந்தியாவின் மீது விழும் பெரும் ஆபத்து உள்ளது.அதனால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா அவசரப்படாமல், பொறுமையுடன் நடந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0