சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தமிழகமெங்கும் ஒரு மோசடி கும்பல் நிலம் மற்றும் வீடு வாங்குபவர்களை குறி வைத்து போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் பத்திரப்பதிவுத்துறை உதவியுடன் ஏமாற்றும் ஒரு கும்பல் நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைந்து திரியும் ஒரு ரவுடி கும்பலை பற்றி ஷாக் ரிப்போர்ட் ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப்பிரிவு நில பிரச்சனை தீர்வு பிரிவில் துணை ஆணையர் பெருமாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரை இப்ராஹிம் வயது 76 தகப்பனார் பெயர் காலிது செங்கல்பட்டு விளம்பூர் பகுதியில் கீழ் பள்ளிவாசல் தெருவில் வசிப்பதாகவும் இவருடைய சொந்த உழைப்பில் 81 ஆம் ஆண்டு அம்பத்தூர் தாலுக்கா கொரட்டூர் ஸ்ரீ பாலாஜி நகரில் 2ஆயிரத்து 420 சதுர அடி இடத்தை ராகவா நாயக்கர் முனுசாமி நாயக்கர் ஆகியோரிடம் இருந்து விலை கொடுத்து வாங்கியதாகவும் அனுபவத்தில் வைத்திருந்ததாகவும் இந்நிலையில் அப்துல் ரஹ்மான் என்பவர் இப்ராஹிம் தனது தந்தை எனவும் அவர் இறந்து விட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்று 2022 ஆம் ஆண்டு தனது மனைவி ஹசீனா என்பவருக்கு போலியான தான செட்டில்மெண்ட் எழுதி அதை திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தும் அதை வைத்து பிரகாஷ் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்து வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து ம் அதன் மூலம் செஞ்சம்மாள் என்பவருக்கு கிரைய விற்பனை செய்து வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இப்ராஹிம் சொத்தை அபகரித்துள்ளனர் குற்றவாளிகள் தங்களுக்கு சொந்தம் இல்லாத இடத்தை போலி ஆவணங்களை உருவாக்கி அதை உண்மையான ஆவணங்கள் போல பயன்படுத்தி ரூபாய் 90 லட்சத்திற்கு கேடிகள் விற்பனை செய்து உள்ளனர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி கொடுத்த புகார் மனுவின் மீது போலீஸ் கமிஷனர் சங்கர்
போலீஸ் குழுவினரை அழைத்து ஸ்காட்லாந்து பானியில் அதிரடி நடவடிக்கை எடுத்து விடுங்கள் என உத்தரவிட்டதன் பேரில் போலீசார் களத்தில் இறங்கினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கி விஜயகுமார் வயது 47 தகப்பனார் பெயர் துரை சிங்கம் கிழக்கு பானு நகர் 5 வது தெரு புதூர் சென்னை என்பவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்தனர் கைது செய்தனர் பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0