சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வருவாய்த் துறையும் பத்திரப்பதிவுத்துறையும் மகா மட்டமான துறையாக மாறிவிட்டதை நினைக்கும் போது நமது கண்களில் ரத்தக்கண்ணீர் தான் வடிக்க முடியும் உங்களுக்கு அமெரிக்க அதிபரின் ஒரிஜினல் வாரிசு சர்டிபிகேட் போலியாகவும் வாங்க முடியும் சென்னை தலைமைச் செயலகத்தையே தன்னுடையது தான் என போலியான ஆவணங்களை வாங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு விற்க முடியும் இப்போது இன்டர்நேஷனல்கேடி தம்பதிகள் மாலத்தீவில் இடத்தை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்திட ஊரார் இடத்தை ரூ 5 கோடி லபக் செய்த மாட்டிக் கொண்டவர்களை பற்றி விவரம் வருமாறு இப்போது ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் சபாஷ் கமிஷனர் என்ற பட்டத்தையும் வாங்கிக் கொண்டார் இது பற்றிய விபரம் வருமாறு சென்னை கீழ்கட்டளை எம் கே நகர் பகுதியில் வசிப்பவர் டேனியல் டொனால்ட் இவரது மனைவி ரீத்து(39) இவர் ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்கும் முகாமில் கலந்து கொண்டு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது என்னுடைய அப்பா பெயர் பி சி ராமலிங்கம் சென்ட்ரல் சில்க் போர்டில் மத்திய அரசு பணியில் துணை இயக்குனர் இன்ஸ்பெக்சனில் பணியாற்றியுள்ளார் என்னுடன் பிறந்தவர்கள் ஜெயஸ்ரீ என்ற அக்காவும் ஷாலினி என்ற தங்கையும் உள்ளார் எனது தந்தைக்கு ஆவடி தாகூர் தெரு காந்தி நகரில் சென்னை திருவள்ளூர் சாலையில் 4328 சதுர அடியில் 6 கடைகளும் சென்னை தியாகராய நகரில் கிர்னார் பகுதியில் அப்பார்ட்மெண்ட் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு ம் திருத்தணியில் வீடு கட்டும் இடமும் மற்றும் ராமகிருஷ்ண புரத்தில் 7 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது தாயார் வத்தச லா இறந்துவிட்டார் என்னுடைய அப்பா ஓய்வு பெறாத நிலையில் இறந்துவிட்டார் மேலே குறிப்பிட்ட இடங்களுக்கு அனைத்து அசல் ஆவணங்களும் மற்றும் பெற்றோர்களின் இறப்பு சான்றுகளும் வாரிசு சான்றுகளும் உள்ளது எனது அக்கா ஜெயஸ்ரீ மேலே குறிப்பிட்ட சொ த்துக்களை பிரித்து தர கேட்ட பொழுது சொத்துக்களை பிரித்து தராமல் காலம் தாழ்த்தி வந்தேன் இந்த நிலை யில் திடீரென சந்தேகம் வந்தது வில்லங்கச் சான்று போட்டு பார்த்தேன் எனது அப்பாவின் ஒரே வாரிசு அக்கா ஜெயஸ்ரீ பெயரில் போலியான வாரிசு சான்று பெற்று ஆவடியில் உள்ள4328 சதுர அடி கடைகளை இன்டர்நேஷனல் கேடிகள் யோகானந்தன் பெயருக்கு செட்டில்மெண்ட் எழுதி வைத்ததுடன் கேட்டதற்கு இந்த செட்டில்மெண்ட் ரத்து செய்வதாக ரீத்துவிடம் சொல்லி ஜெயஸ்ரீ பெயருக்கு மாற்றிக்கொண்டார் இதன் மதிப்பு ரூ5 கோடி ஆகும் இது சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டதின் பெயரில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பெயரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரடி மேற்பார்வையில் போலி ஆவண தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு ஜெயஸ்ரீ வயது 40 கணவன் பெயர் யோகானந்தன் எம ரேல்டு பிளாட்ஸ் முகப்பேர் ரோடு அண்ணா நகர் திருமங்கலம் சென்னை இவளது கணவன் யோகானந்தன் வயது 51 தகப்பனார் பெயர் ரோசி நாயுடு ஆகிய இரண்டு இன்டர்நேஷனல் கேடிகளையும் சாதுரியமாக செயல்பட்டு கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற காவலில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைத்தனர் குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் அமெரிக்க அதிபரின் உண்மையான வாரிசு என போலி சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும் முடியும் சென்னை தலைமைச் செயலகத்தின் அசல் சான்றிதழ்களைப் போல் போலி சான்றிதழ்களையும் ரெடி செய்ய முடியும் மாலத்தீவில் இடத்தை வாங்கி சொகுசாக வாழ்ந்திட ஆசைப்பட்டு இந்த காரியத்தை செய்தோம் என வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0