கோவை சிறு குறு தொழிற்கூட மின்கட்டண அபராத தொகையை மீட்க கோரி தலைமை மின் பொறியாளர் அறிவுறுத்தல்.

கோவை, தொழில் முனைவோர்கள் ,மாவட்ட தலைமை மின் பொறியாளர் குப்பு ராணி யை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் சார்பில் சந்தித்தனர், இதில் மின்சார வாரியம் எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் 18 கிலோ வாட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு அபராத தொகை விதிக்கபட்டது சம்மந்தமாக இரு தினங்களுக்கு முன் (24.9.2024ல்) நாங்கள் தந்த மனு வுக்கு விபரங்கள் அறிய கேட்டனர், அதற்கு தலைமை மின் பொறியாளர், நாங்க ளாக அபராதம் விதிக்கவில்லை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த செப்டம்பர் 14 தேதியில் மூன்று கிலோ வாட்டுக்கு மேல் LT CT மற்றும் கமர்சியல் மின்சாரத்தை பயன் படுத்துவர்களுக்கு பவர் பேக்ட் அடிப்படையில் அபராதம் விதிக்க அனுமதி வழங்கிய தின் அடிப்படையில் 1.7.2024 தேதியில் இருந்து மீட்டரில் காட்டப்படுகின்ற மின் சேதரத் தின் அடிப்படையில் அபராத தொகையுடன் வசூலிப்பதற்கு அனுமதி வழங்கியது ஆகையால் முன் தேதியிட்டு அபராத தொகை வசூலிக்கப்படுகிறது இதில் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது என்றும்,மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தின் மூலமும் ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலமாக தான் அபராதம் விதிப்பது சம்பந் தமாக அணுக வேண்டும் என்று கூறியுள்ளார்கள் அபராத தொகையுடன் மின் கட்டணத்தை அதுவரை நீங்கள் செலுத்த வேண்டும் என்று கூறியதாக தொழில் அமைப்புகள் தெரிவித்தார்கள் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிட த்தில் எந்த விதமான விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் மின்வாரிய இணையதளத்தில் வெளியீட்டு இக் கட்டணத்தை உயர்த்தி இருப்பது தொழில் முனைவோர்கள் மத்தி யிலும் கமர்சியல் இணைப்பு பெற்று கட்டணத்தை கட்டுபவர்கள் மத்தியிலும் கடுமை யான அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தின் மின்சார வாரியத்தின் தலைவர், ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர், மின்சார துறை அமைச்சரும் இதில் தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்து முழுமையாக விதிக்கப்பட்ட அபராத தொகையை திரும்பப் வழங்க வேண்டும். மின் சேமிப்புக்கான மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தி மின் சேதாரத்தை தவிர்ப்பதற்கு வழிகாட்டிய பிறகு மின்சார பராமரிப்பில் சேதாரம் ஏற்படுமானால் அபராதம் விதிப்பது முறையாக இருக்கும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் சார்பில்
மாவட்ட தலைமை மின் பொறியாளரிடம் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினர் மேலும் உடனடியாக இந்த பிரச்சினையை மின்சார ஒழுங்குமுறை ஆணைத் திடமும் மின்சார வாரியத்தின் தலைவர் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவதாகவும் தமிழகத்தில் குறிப்பாக கோவை மண்டலத்தில் மட்டும்
58 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் 12 கிலோ வாட்க்கும் குறைவான மின் இனைப்பு பெற்று மின்சாரத்தை பயன்படுத்துவோர்கள், கொண்டது அபராத விதிப்பால் கடுமையாக தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குறுந்தொழில் முனைவோருக்கு உதவிட வசூலிக்கப்படுகின்ற அபராத தொகையை திருப்பி வழங்கிடவும் இந்த பிரச்சினையில் தமிழக அரசும் தலையிட்டு பரிசீலித்து வழி காட்டுதல் வேண்டும் என்று கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றார்கள் இச் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர்கள்
ஜே.ஜேம்ஸ் M.ரவீந்தரன்,தொழில் அமைப்புகளின் தலைவர்கள் ஜெயகுமார் மணி, சாகுல்அமீது,நடராஜன்,விமல்ராஜ் சாகுல் என இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.