கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் கண்ணா (50). இவர் திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். கடந்த இரண்டு மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக பணிக்கு செல்லாத நிலையில் பவானிசாகர் அருகே உள்ள தாண்டாம்பாளையம் மேடு பகுதியில் உள்ள அவரது அம்மா வீட்டில் தங்கியிருந்தார். முன்தினம் மாலை ரமேஷ் கண்ணா வீட்டில் உடல் நலக்குறைவு காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவரது உடல் சத்தியமங்கலம் மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. காவல்துறை சார்பில் சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன் ஜமால் இன்ஸ்பெக்டர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு உடல் எரியூட்டப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0