ரஷ்யா, உலகின் பொருளாதாரத்தில் இந்திய நாட்டின் பங்கு மிகவும் அவசியமானது என்று தெரிவித்திருக்கிறது.
உலக பொருளாதாரம் பற்றி ரஷ்ய நாட்டின் வெளியுறவு மந்திரியான செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்ததாவது, உலகினுடைய பொருளாதாரத்தில் இந்திய நாட்டின் பங்கு மிகவும் அவசியமானது. பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியமான நாடுகளில் இந்தியா ஒன்றாக விளங்குகிறது.
இந்திய நாட்டின் செல்வாக்கு ஆசிய நாடுகளில் அதிகம் இருக்கிறது. சீனா மற்றும் இந்தியாவை பற்றி தெரிவிக்க வேண்டும் எனில், இரண்டு நாடுகளும் அதன் பிராந்தியங்களுக்குரிய அதிகார மையங்களாக இயங்குகின்றன. இதன் காரணமாக, இந்த நாடுகளின் திறனை உலகளவில் புறக்கணிக்க இயலாது.
ஐ.நா சபையில் இந்தியா வைத்த கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். நிரந்தர உறுப்பினராக இந்தியா வருவதற்கு ரஷ்யா ஆதரவு தரும். ஐக்கிய நாடுகள் சபை மட்டுமன்றி இந்திய நாட்டின் பங்கானது பிராந்திய அமைப்புகளிலும் உயர்ந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.