மீட்பு பணியில் இந்திய ராணுவம்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பலத்த மழையின் காரணமாக இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கடற் படையினர் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவம் தற்போது அங்கு வரவழைக்கப்பட்டுள்ளது. சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 2 ஹெலிகாப்டர்கள் வயநாடு விரைந்து உள்ளது. அந்தப் பகுதியில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.