கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை.. கடன் வழங்கி உதவியதில் இந்தியா முதலிடம்..!!

லங்கைக்கு பல்வேறு நாடுகள் கடன் வழங்கி வருகிறது.

தற்போது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு இந்தியா, சீனா, ஜப்பான் என பல்வேறு நாடுகள் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நிதியகம் உள்ளிட்ட அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றது. இது குறித்து வெரிட் ரிசர்ச் என்ற ஆய்வு அமைப்பு ஆய்வு ஒன்று செய்துள்ளது. அதில் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் இலங்கைக்கு வழங்கப்பட்ட 968 மில்லியன் டாலர் கடனில் இந்தியா மட்டும் 377 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

இதனையடுத்து ஆசிய வளர்ச்சி வங்கி 360 மில்லியன் டாலர் கடன் வழங்கியிருப்பதாக அந்த அமைப்பு கூறி உள்ளது. மேலும் கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக சீனா இருந்துள்ளது. ஆனால் தற்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. ஆனாலும் கூட இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் இந்தியா தற்போது முதல் இடத்தில் இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.