வாஷிங்டன் : ‘உலக அரங்கில், இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது’ என, அமெரிக்க மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை உதவி செயலாளர் நான்சி இஸோ ஜாக்ஸன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:’ஜி – 20′ அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பது நாட்டின் வளர்ச்சியை ஒவ்வொரு துறையிலும் வலுப்படுத்தும்.
இதன் வாயிலாக உலக அரங்கில் இந்தியாவின் பங்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதேபோலவே அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவும் வலுவடைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். மேலும், ஆசிய அமெரிக்க சமூகத்தினருடன், வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி நான்சி கலந்துரையாடினார். இதற்கு, ஆசிய அமெரிக்கர்களுக்கான அதிபரின் ஆலோசனை குழு உறுப்பினர் அஜய் ஜெயின் புடோரியா ஏற்பாடு செய்திருந்தார்.