கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.

கோவை வ. உ . சி பூங்கா மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 78வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் கிராந்தி குமார் பாடிதேசியக்கொடி ஏற்றி வைத்தார்.அப்போது வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. பிறகு திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.பின்னர் சுதந்திர தின போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக பணியாற்றிய 144 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார் .இதை யடுத்து கோவை மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 39 போலீசாருக்கும் கோவை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 44 போலீசாருக்கும் கலெக்டர் காந்தி குமார் பாடி பாராட்டு சான்றிதழ் வழங்கினார் இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ – மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 700 மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.அவர்கள் அனைவருக்கும் கலெக்டர் கிராந்தி குமார் பரிசுகள் வழங்கினார்.தினமும் மாலையில் வாகா எல்லையில் இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் அணி வகுப்பில் ஈடுபடுவார்கள் அது போன்ற அணிவகுப்பு சுதந்திர தின விழாவையொட்டி கோவை வ உ சி உங்க மைதானத்தில் நேற்று நடந்தது இந்த அணிவகுப்பை கோவை மாநகர காவல்துறை ஆயுதப்படை போலீசார் மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். இதற்காக 52 போலீசாருக்கு 20 நாட்கள்கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை பார்த்து பார்வையாளர்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,அவரது துணைவியார் சுவேதா சுப்பையா பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில் குமார், கோவை சரக டி.ஐ.ஜி சரவணன சுந்தர், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகார்த்திகேயன் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின், சரவணகுமார்,சுகாசினி ,மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சர்மிளா, பொள்ளாச்சி சப் கலெக்டர் சரண்யா, கூடுதல் கலெக்டர் சுவேதா சுமன், உதவி கலெக்டர் பயிற்சி அங்கத்குமார் ஜெயின்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.வ உ சி பூங்கா மைதானத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது ! “மெட்டல் டிடெக்டர் ” சோதனைக்கு பின்னர் பார்வாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மைதானத்தை சுற்றியுள்ள உயர்ந்த கட்டிடங்களில் இருந்து போலீசார் , “பைனாக்குலர் ” மூலம் கண்காணித்தனர். கலெக்டர் கொடியேற்றும்போது கயிறு மேலே சென்றதும் முடிச்சி அவிழாமல் சிக்கிக் கொண்டது . இதனால் கொடியை இறக்கி ஏற்றப்பட்டது. அப்போது மீண்டும் சிக்கி கொண்டது. பின்னர் 3-வது முறையாக கீழே இறக்கி ஏற்றிய பிறகுதான் முடிச்சு அவிழ்ந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பார்வை யாளர்களுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு வானில் பறக்க விடப்பட்ட வண்ண பலூன்கள் கொடிக்கம்பத்தில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்துமரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர் ஸ்டாலின் , சரவணகுமார், சுகாசினி மற்றும் உயர் அதிகாரிகள் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் பங்கேற்றனர்.