யூடியூப் மூலம் கோடிக்கணக்கில் வருமானம்… வீடு தேடி சென்ற வருமான வரித்துறையினர்.!!

ன்றைய காலகட்டத்தில் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் மக்களை விட யூடியூப் சேனல் நடத்தி அதில் இருந்து பணம் ஈட்டும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல அவர்கள் வருமானம் குறித்த வதந்திகளும் , வரி ஏய்ப்பு வழக்குகளும் அதிகாரியது வருகின்றன. அப்படியான ஒரு தற்போது உத்திர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்திர பிரதேசத்தில் பரேலியில் தங்கியிருக்கும் தஸ்லிம், தனியாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் ஷேர் மார்க்கெட் பற்றிய தகவல்களை போஸ்ட் செய்து அதில் இருந்து வருமானம் ஈட்டி வருகிறார். அதற்கு கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரியும் செலுத்துவதாக அவரது சகோதரர் கூறுகிறார். ‘டிரேடிங் ஹப் 3.0’ என்ற யூடியூப் கணக்கை தனது சகோதரர் நிர்வகிப்பதாக ஃபெரோஸ் கூறினார்.ஆனால் சமீபத்தில் உத்தரபிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதில் ₹ 24 லட்சம் ரொக்கம் கிடைத்துள்ளது . விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தஸ்லிம் பல ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி, கிட்டத்தட்ட ₹ 1 கோடி சம்பாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.