கோவை காந்தி பார்க்கில் அருள்மிகு பால தண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இங்கு நிர்வாக அதிகாரி அலுவலகம்,பாலூட்டும் தாய்மார்கள் அறை,புதிய நுழைவு வாயில் கதவு திறப்பு விழா ஆகிய 3நிகழ்ச்சிகள் இன்று காலை நடந்தது. விழாவில் கே. ஈஸ்வரசாமி எம்.பி,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். விழாவில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ. ரவி,கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் எம். ராஜா.ஆர் .எஸ் .புரம் பகுதி கழகச் செயலாளரும்,கவுன்சிலருமான கார்த்திக் கே. செல்வராஜ்,மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் சோமு என்ற சந்தோஷ்,பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் டி.பரமசிவன் மற்றும்அறங்காவலர்கள் ஆர். மகேஸ்வரன், பி .விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்குவந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் டி.பரமசிவன் மாலை ,சால்வை அணிவித்து, வரவேற்றார். அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0