சூலூரில் எலும்பு மருத்துவமனை சேவை துவக்கம்

கோயமுத்தூர் மாவட்டத்தில் பிரபலமாக இயங்கி வரும் முத்து எலும்பு மருத்துவமனை தனது மூன்றாவது கிளையினை சூலூர் பகுதியில் நிறுவியுள்ளது கடந்த ஓராண்டுகளில் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் தங்களின் மருத்துவமனைக்கு வருகை தந்திருப்பதாகவும் மேலும் தற்போது இருக்கின்ற போக்குவரத்து நெரிசலில் விரைவான அவசர சேவைகளை பயன்படுத்துவதற்கு முடியாதாலும் சூலூர் பகுதியில் தங்களது மருத்துவமனையை நிறுவி உள்ளதாக மருத்துவர் முத்து சரவணகுமார் தெரிவித்தார் மேலும் தங்களது மருத்துவ சேவையை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்துகின்ற வகையில் குறைந்த செலவில் அதிரவீன மருத்துவ உபகரணங்களை கொண்டும் கைதேர்ந்த மருத்துவக்குழுவை கொண்டும் விரைவான மருத்துவ சேவை ஆற்றிட இக்கிளை துவங்கி உள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். திறப்பு விழாவில் காமாட்சிபுரம் ஆதீனம் இளைய பட்டம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ,சூலூர் எஸ் ஆர் எஸ் அறக்கட்டளை தலைவர் த மன்னவன், பேரூராட்சி தலைவர் தேவிமன்னவன், அம்மன் அடிமை சண்முகசுந்தரம், பள்ளபாளையம் சாமிநாதன், இருகூர் சுப்பிரமணியம், போர்வெல் ஜெயராமன், வழக்கறிஞர் அரிமா கந்தநாதன், சித்த மருத்துவர் சண்முக பாண்டியன், பள்ளபாளையம் போட்டு கனகராஜ், பசும்பொன் தேசியக் கழகம் அமிர்தா முருகேசன், சூலூர் நகர திமுக செயலாளர் உரம் கௌதம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் அரிமா தர்மராஜ், கட்டிட பொறியாளர் சங்கத் தலைவர் பொறியாளர் குமரேசன், கண்ணம்பாளையம் முருகேசன், மற்றும் கோவை மாவட்ட வணிக நிறுவனங்களின் தலைவர் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள், மக்கள் சேவை அமைப்பினர் மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர் திறப்பு விழாவினை முன்னிட்டு ஒரு நாள் முழுவதும் சிகிச்சைகள் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.