சூலூர் வியாபாரிகள் பேரவை ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்..!

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கோயமுத்தூர் கிழக்கு மாவட்டம் சூலூர் ஒன்றிய அலுவலக திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா மாநிலத் தலைவர் வணிகர்களின் போராளி அண்ணாச்சி அ. முத்துக்குமார் கொடியேற்றி அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். சூலூர் ஒன்றிய தலைவர் ஜெபத்துரை தலைமையில், கோவை மண்டல தலைவர் சுதர்சனன், மண்டல செயலாளர் பாலகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட தலைவர் C.A. ராஜ் , ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய பொருளாளர் குமரவேல் வரவேற்பு உரை ஆற்றிட மாநில பொதுச் செயலாளர் ராஜா, மாநில பொருளாளர் பொன்னுச்சாமி, மாநில துணைத்தலைவர் வேல்முருகன், மாநில செயலாளர் ஆனந்தன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மாநில இளைஞரணி தலைவர் ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனார். சிறப்பு விருந்தினர்களாக சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் மற்றும் சூலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஊராட்சி தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் சூலூர் ஒன்றிய துணைத் தலைவர்கள் கௌரவ ஆலோசகர்கள் துணைச் செயலாளர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஏராளமான வணிகப் பெருமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இரட்டை பாதை ஆசிரியர் சிவபெருமாள் ஒன்றிய கவுரவத் தலைவர் நெல்லை காசி எட்வின் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தினர்.