கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம் வார்டு எண் 7 ல் மதியால் நகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலக்கூட கட்டிடத்தை கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் P.R.நடராஜன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 17 லட்சம் மதிப்பீட்டில் வையாபுரி வீதி, கதிரான் வீதி, ஆறுமுகம் வீதி, மற்றும் மாகாளி வீதியில் வடிகால் கட்டுதல் பணியும் வார்டு எண் 1ல் பேரூராட்சி படத்துறையில் ஆர் வி எஸ் கல்லூரி ஐந்து லட்சமும் பேரூராட்சி15 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர், சுற்றுச்சுவர், மற்றும் மேம்பாடு செய்தல் பணி துவக்க விழாவினை துவங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் தேவிமணவன், சூலூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், துணைத் தலைவர் கணேஷ், தலைமை எழுத்தர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கிருத்திகா ,சூ.பே. கருணாநிதி, லலிதா, விஜயலட்சுமி, தங்கமணி, வீராசாமி, பாலாஜி பசுமை நிழல் விஜயகுமார், சூலூர் திமுக நகரச் செயலாளர் கௌதமன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சந்திரன், கிளை செயலாளர் ராசப்பா பேரூராட்சி மன்ற அலுவலர்கள் அப்பகுதிவாள் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0