வால்பாறையில் சூழல் உணர்திறன் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி கடையடைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர் திறன் வரைவு அறிக்கை மசோதாவால் தமிழம் முழுவதிலும் சுமார் 183 கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படுவதை தடுக்கவும் அந்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசு சட்டப்பேரவையில் தனித்தீர் மானம் நிறைவேற்றி மத்திய அரசு இந்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தவேண்டி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு தலைமையில் அனைத்துகட்சியினர், அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து முதற்கட்டமாக அனைத்து வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் ஒருநாள் அடைக்கப்பட்டு வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர் ஆனால் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, பஜக,காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், நாம்தமிழர்,தவேக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பங்கேற்ற நிலையில் திமுக கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.