வால்பாறையில் தாய்க்கு மகள் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பொன்னுசாமி என்பவர் கடந்த 28.12.2013 அன்று பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்தார் இவருக்கு மனைவி ஆராயி வயது 52 மற்றும் மகள்கள் கவிதா வயது 35, மஞ்சு வயது 33 மற்றும் கௌரி வயது 31 ஆகிய மூவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் பொன்னுச்சாமியின் உயிரிழப்பைத் தொடர்ந்து மகள் கௌரிக்கு கருணை அடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆத்தூர் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணி வழங்கப்பட்டதாகவும் இவர் வேலைக்கு சென்ற நாள் முதல் தனது தாய் ஆராயி மற்றும் உடன்பிறந்த சகோதிரிகளுக்கோ எந்தவித உதவியும் செய்யாத நிலையில் தாய் ஆராயி வால்பாறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஸ்வநாதன் உதவியை நாடி கடந்த 18.11.2022 அன்று ஜீவனாம்சம் வழக்கு தொடர்ந்துள்ளார் இந்த வழக்கு நடைபெற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த தீர்ப்பின் படி ஆண் வாரிசுகள் இல்லை என்றாலும் இரு சகோதரிகளுக்கு போதிய வருமானம் இல்லாததால் ஜீவனாம்சம் தரவேண்டாம் என்றும் தாய் மற்றும் இரு சகோதரிகளின் உதவியால் அரசு வேலை செய்து வரும் கௌரி தனது தாயை பராமரிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் மாதம் 20 ஆயிரம் ரூபாய் என 16 மாதங்களுக்கு சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்குவதோடு இனிவரும் ஒவ்வொரு மாதமும் ரூ.20 ஆயிரம் பிரதிமாதம் 5 ஆம் தேதிக்குள் தரவேண்டும் என்றும் மேலும் நீதிமன்ற வழக்கிற்கு ஏற்பட்ட செலவீனங்களுக்கு மனுதாரராகிய ஆராயிக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கவேண்டும் என்றும் வால்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் இறுதி தீர்ப்பு வழங்கியதாகவும் வழக்கறிஞர் மா.விஸ்வநாதன் தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார் மேலும் மகன்களிடத்திலிருந்து மட்டுமே ஜீவனாம்சம் பெறமுடியும் என்ற நிலைமாற்றி முதல் முறையாக மகள்களிடத்திலிருந்தும் ஜீவனாம்சம் பெறமுடியும் என்ற தீர்ப்பு வால்பாறை நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மேலும் இந்த வழக்கில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் விஸ்வநாதனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்