திருச்சியில் சாரண சாரணியர் பெருந்திரளணி உலக அளவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.

திருச்சி மணப்பாறையில் உலக அளவில் நடைபெற உள்ள சாரண சாரணியர் பெருந்திரள் அணி கூட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கூட்டம் ஆட்சியரக கூட்ட அரங்கில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க தலை வருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், பள்ளி கல்வித்துறை அரசு செயலாளர் சோ.மதுமதி.இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப. ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் த
காமினி,இ.கா.ப. , மாநகராட்சி ஆணையர் வே.சரவணன்.இ.ஆ.ப. , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்,இ.கா.பஉதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா.இ.ஆ.ப. மாநில முதன்மை பேராணையர் பாரத சாரண சாரணியர் இயக்கம் பெருந்திரளணி பொறுப்பாளர். அறிவொளி, மாநில தொடக்கக் கல்வி இயக்குநர்கள் கண்ணப்பன், நரேஷ், பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், அனைத்து துரை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் அதுவும் திருச்சியில் சாரண சாரணியர் உயர் பொறுப் பாளர்கள் உலக அளவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக தமிழ்நாடு அதுவும் திருச்சியை உலகமே உற்று நோக்கும் நிகழ்ச்சியாக அமையப் போகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.