திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் இருங்கலூர் கிராமத்தில் அமைந்துள்ள எங்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் சர்வே எண் 219/59 ஏர்ஸ் பட்டா எண் 3856 ஆகும். நாங்கள் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் 40 குடும்பங்களுக்கு வீட்டுமனை இலவச பட்டா அரசு வழங்கி இருக்கிறது எங்களுக்கு வசதி இல்லாத காரணத்தால் வீடு கட்ட முடியவில்லை எங்களால் கலைஞர் கனவு இல்லத்தில் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகிறோம். அரசு இதை பரிசீளித்து எங்கள் 40 குடும்பங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்பதை மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0