திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் A.P முருகேசன் தலைமையில் நடைபெற்ற வரும் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் தூய்மை பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை திறந்து வைத்து 1000 மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஒன்றிய குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஊராட்சி செயலாளர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தூய்மை பணியாளர்கள் மகளிர் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0