நீலகிரி மாவட்டத்தில் குடிநீரில் ஏற்பட்ட பாதிப்புகளை தாமதம் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்

நீலகிரி மாவட்டம் உதகை 18வது வார்டு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகவே குடிநீரில் அசுத்த நீர் கலப்பதாக பகுதி மக்கள் சொன்னதின் அடிப்படையில் அனைத்து பகுதிகளீலும் நகராட்சி பிளம்பர்களை கொண்டு ஆய்வு செய்தும் முனீஸ்வரர் கோவில் அருகே இருந்து அனைத்து இனைப்புகளையும் துண்டித்தும் புதிதாக 2 இன்ச் பிரான்ச் ஜம்ஜம்ஸ்டோர் வரை கொண்டுவந்தும் அதில் இனைப்புகளை புதியதாக கொடுத்தும் நமது உதகை நகராட்சியின் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலுவலர்கள் துரிதமாக அரும்பாடுபட்டும் பணிகளை செய்தனர், மீண்டும் முந்தாநாள் சாட்லைன் பகுதி ஜம்ஜம்ஸ்டோர் முன்புறமுள்ள வீடுகளில் புகார் வந்ததால், உடனடியாக அப்பகுதி 18 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கே ஏ முஸ்தபா அவர்களும் பிளம்பர் சுரேஷ் ராம் ஆகியோர் வீடுவீடாக போய் ஆய்வு செய்து அசுத்த நீர் கலப்பதை உறுதி செய்து அங்கிருந்தே நமது நகராட்சி சுகாதார அதிகாரி MHO Dr Srithar மற்றும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பிரவீன் ஆகியோரிடம் பேசி அவர்களும் உடனடியாக புகார் வந்த வீடுகளில் ஆய்வு செய்து லேப் டெஸ்ட்டுக்கு குடிநீரை எடுத்துச்சென்றனர், உடன் பழக்கடைமுஜியும் பல உதவிகளை மேற்கொண்டு வந்தார், லேப் டெஸ்டின் ரிசல்ட் வந்துள்ளது அதில் சிறிதளவு அசுத்த நீர் கலந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக MHO Dr சார் தெரிவித்தார், அதனை சீர் செய்ய டாக்டர் அவர்களும் ஆய்வாளர் அவர்களும் RKபுரம் நீரேற்று நிலையத்துக்கு ஊழியர்களுடன் சென்று தேவையான அளவு “குளோரின்” கலந்து நடவடிக்கை எடுத்துள்ளார், வார்டு மக்களின் சார்பில் மிக்க நன்றி மேலும் வால்வு பகுதியில் இடையே நீர் கலக்காமல் இருக்க சுரேஷ் வாழ்வை கழட்டு எடூத்து லேத்தில் கொடுத்து சீர் செய்யப்பட்டது,
குடிநீர் வழங்கும்போது பழைய நீரை வெளியேற்றி ஸ்கவர் செய்து புதிதாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் அனைத்து பணிகளையும் நகராட்சி பணியாளர்கள் அதிகாரிகளுடன் துல்லியமாக செய்து அசுத்த நீரை முழுமையாக சரி செய்து குடிநீர் வினியோகம் தற்போது பகுதிகளுக்கு சீராக வருவதால் நகராட்சி அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் 18 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் கேஏ முஸ்தபா அவர்கள் நன்றி தெரிவித்தார், மற்றும் நகர மன்ற உறுப்பினர் அப்பகுதி மக்களுக்கு நேரம் காலம் பாராமல் மக்களின் தேவைகளை புரிந்து தாமதம் இல்லாமல் உடனடியாக பணிகளை வெகு விரைவில் மக்களுக்கு செய்து தரக்கூடிய தங்களது நகர மன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்,