நீலகிரி மாவட்ட உதகை நகராட்சி அலுவலகத்தில் மாதந்திர நகர மன்ற கூட்டம் உதகை நகராட்சி தலைவர் வாணிஸ்வரி துணைத்தலைவர் ரவிக்குமார் , நகராட்சி பொறியாளர், ஆகியோர் மன்றத்தில் அமர்ந்தனர்? கூட்டத்தில் அனைத்து வார்டு நகரம் மன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர், ஒவ்வொரு மாதமும் கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் விவாதித்த கோரிக்கைகள் ஒரு சில பணிகளை நிறைவேற்றப்படுகிறது என்று வாடு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர், காந்தல் பகுதியில் உள்ள வார்டுகள் குப்பைகளை அனேக இடங்களில் எடுக்கப்படாமல் பல நாட்கள் விட்டுவிடுவதால் சுகாதார சீர்கேடு மக்களை பாதிப்புக்குள்ளாகிறது என்று அதிமுக கவுன்சிலர்கள் தனிப்பட்ட முறையில் வாதாடினர், அதற்கு நகராட்சி ஒவ்வொரு மாதக் கூட்டத்திலும் வழக்கம் போல் அளிக்கும் பதிலே சரி பார்த்து விடலாம் செய்து விடலாம் இம்மாதமும் அதே பதிலை அளித்துள் ளார்கள், உதகை நகராட்சி பல பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர்கள் வெளியேறி செல்வது தொடர்கதியாகி உள்ளது, இதனை உடனடியாக நகராட்சியோ பகுதி வர்ட் நகர மன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுப்பது சற்று தாமதமாகவே உள்ளது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர், மற்றும் உதகை உழவர் சந்தை விவசாயிகளுக்காக கலைஞர் ஆட்சி யில் திறக்கப்பட்டு தற்போது வரை இயங்கி வரும் இந்த உழவு சந்தையில் ஒதுக்கப்படும் வாழை மரங்கள் கழிவு குப்பைகள் உழவர் சந்தை நுழைவு பகுதியில் கொட்டப்படுகிறது இந்தக் குப்பைகளை இரண்டு நாட்களுக்கு ஒருவசை கூட எடுக்காமல் ஒரு வாரத்திற்கு மேலாக எடுக்காமல் அப்படியே விட்டு வைக்கிறார்கள், இதனை உழவர் சந்தை அதிகாரி களும் கண்டு கொள்வதில்லை, 17 வது வார்டு நகர மன்ற உறுப்பினரும் நடவடிக்கை எடுப்பதும் தாமதமாக உள்ளது? இதனால உழவர் சந்தைக்கு வரக்கூடிய பொதுமக்கள் வியாபாரிகள் சுகாதார சீர்கேடு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் இதனை சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்? முன்னைய நாட்களில் குப்பைகள் சேகரிக்க குப்பை பாக்ஸ்கள் வைத்து வரப்பட்டன சில வருடங்களுக்கு முன்பாக அவைகள் அகற்றப்பட்டு
ஒவ்வொரு பகுதியிலும் தூய்மை பணியாளர்களே வந்து வாங்கிக் கொள்வார்கள் என்று திட்டங்கள் கொண்டுவரப்பட்டு சில நாட்களாக செயலில் இருந்தது,நாளடைவில் அது போன்ற செயல்கள் மாறி குப்பைகளை பெற்றுக்கொள்ள எந்த ஒரு நகராட்சி தூய்மை பணியாளர்களும் அந்தத் திட்டத்தை தொடர்ந்து செய்ய முடியவில்லை அதிகாரிகளின் கவனக்குறைவும் பொறுப்பற்ற செயலுமே இந்தத் திட்டம் நாளடைவில் காணாமல் போய்விட்டது? தற்போது குப்பைகளை மக்கள் கொட்டுவதற்கு எந்த குப்பைத் தொட்டியும் வைப்பதில்லை இதனால் குப்பைகள் சாலை ஓரங்களில் வீசுவதும் ஒவ்வொரு வார்டு பகுதி ஓரங்களில் குப்பைகளை வைத்து செல்கின்றன இந்தக் குப்பைகளை கால்நடை மாடுகள் குதிரைகள் நாய்கள் காட்டுப் பன்றிகள் நாள்தோறும் மேய்ந்து செல்கின்றன இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடும் தூய்மை இந்தியா என்ற பெயருக்கு இடமில்லாமல் போகிறது? மற்றும் உதகை சில இடங்களில் ஏற்கனவே உள்ள நகராட்சி கழிப்பிடங்கள் போதிய அளவு தூய்மை இல்லாமல் உள்ளதை மக்கள் தெரிவிக்கின்றனர், மற்றும் ஏடிசி அரசு தாவரவியல் பூங்கா மார்க்கெட் போன்ற பகுதியில் உள்ள பொதுமக்கள் கழிப்பிடங்களில் அதிக அளவு கண்டனம் மசூலிப்பதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குழம்பி செல்கின்றனர்? இதனை நகராட்சி மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் கண் காணித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்? கடந்த மாதம் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் வைக்கும் கோரிக்கைகளை உடன டியாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று நகராட்சி தலைவர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள், ஆனால் சில பணிகள் நடைபெறுகிறது மக்கள் எதிர்பார்க்கும் பல பணிகள் தொய்வு ஏற்படுவதால் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள்? நடந்த மாதாந்திர கூட்டத்தில் ஆணையாளர் இல்லாமலே நகர மன்ற கூட்டம் மந்தமாக முடிந்தது, ஒரு நகராட்சி ஆணையாளர் நகர மன்ற உறுப்பினர்களோடும் பொதுமக்களோடும் அணுகி குறைகளை சரிவர கேட்டறிந்து பகுதிகளை நேரடியாக சென்று பார்த்தால் மட்டுமே மக்களின் அடிப்படை வசதிகளின் குறைபாடுகளை கண்டறிய முடியும் ஆனால் உதகைக்கு ஒரு நகராட்சி ஆணையாளர் ஆறு மாதம் இருப்பதே கேள்விக்குறியாகி உள்ளது? ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒவ்வொரு வருஷத்திற்கும் ஒரு நகராட்சி ஆணை யாளர் பணியிடம் மாற்றப் பெற்றால் எப்படி நகர மன்ற உறுப்பினர்களால் பணிகளை எடுத்துச் செய்ய முடியும், அல்லது அந்த பணிக்கான வேலை அனுமதி எந்த ஆணையாளர் வழங்குவார் என்பது தற்போது உதகையில் கேள்விக்குறியாகி உள்ளது? உதகை நகராட்சி மக்கள் எதிர்பார்க்கும் தூய்மை இந்தியா திட்டம் நீலகிரி உதகையில் நிறைவேறுமா மக்களிடையே ஏமாற்றத்தை அளிக்கிறது என்பது தான் உண்மை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்??

What’s your reaction?
Love0
Sad1
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0