நீலகிரி உதகையில் குடிநீர் தட்டுப்பாடு பலப்பகுதிகளில் நீடித்து வரும் நிலையில் குடிநீர் குழாய் உடைபட்டு சாலையில் வீணாக செல்லும் குடிநீர்

நீலகிரி மாவட்டம் பல பகுதியில் ஐந்து மாதங்களுக்கு மேலாக மழை இல்லாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது, பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உதகை மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது, வெயிலின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நீலகிரி உதகை எலிகள் கோவில் அருகே உள்ள எச் எம் டி தனியார் நிர்வாகம் அருகில் குடிநீர் விநியோக குழாய் உடைபட்டு ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் சாலையில் வீணாக செல்கின்றன, இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேலான குடியிருப்பு உள்ளது
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற குடிநீர் குழாய் உடைபட்டு சீர் செய்யாமல் போவதால் மக்கள் உபயோகிக்கக்கூடிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு நான்கு நாட்களுக்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை என்ற அவல நிலை தற்போது உதகையில் பல பகுதியில் ஏற்பட்டு வருகின்றன, இது போன்ற உடைபட்ட குடிநீர் குழாய்களை நகராட்சி பணியில் பழுதுபார்க்கும் பிளம்பர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீர் செய்தால் இருக்கும் கொஞ்ச தண்ணீரை காப்பாற்ற முடியும் இன்று பகுதி மக்கள் கூறுகின்றன,இன்றும் குடிநீர் வீணாகி சாலையில் செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர் வரும் நாட்களில் மழை இல்லை என்றால் மனிதனுக்கு குடிநீர் இல்லை, உடைபட்ட குடிநீர் குழாயை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி படுத்த வேண்டும் என்று பகுதி மக்கள் வேண்டுகோள்.