நடுரோட்டில் கோவை போலீஸ் ஏட்டை காலால் எட்டி உதைத்து கொலை மிரட்டல் – வாலிபருக்கு வலை..!

கோவை ராமநாதபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சந்திரன். இவர் நேற்று ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் பிரிவில்போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் பணியாமல் வந்த ஒருவரை தடுத்து நிறுத்திவிசாரணை நடத்தினார். அவரிடம் வாகனத்துக்குரிய ஆர்.சி. புக்,இன்சூரன்ஸ்,உரிமம் ஆகியவை உள்ளதா? என்று கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர் ஏட்டு சந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி காலால்வயிற்றில் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஏட்டு சந்திரன் இராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீஸ் விசாரணையில் அவரது பெயர் ரோகித் ரத்தினகரன் என்பது தெரியவந்தது.இதுகுறித்து அவர்மீது கொலை மிரட்டல், தாக்குதல் ,அரசு ஊழியர்களை பணி செய்யக்கூடாது தடுத்தல் உள்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.