நீலகிரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆ இராசாவை ஆதரித்து தலைமை கழகப் பேச்சாளர் திவ்ய தாய் அன்பு பாடல் பாடி வாக்கு சேகரிப்பு செய்தார்கள்,

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின். திமுக வேட்பாளர் ஆ.இராசா அவர்கள் ஆதரித்து நீலகிரி உதகை நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில், செயற்குழு உறுப்பினர் இளங்கோவின் முன்னிலையில் உதகை ஏடிசி திடலில் திமுகவின் தலைமை கழகப் பேச்சாளர் திவ்யா தாய் அன்பு அவர்கள் நீலகிரி பாராளுமன்ற வேட்பாளர் ஆ இராசா அவர்களை ஆதரித்து பேசியதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெண்கள் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள்,என பலர் பயன் பெற்று வரும் மாதம் ஆயிரம் ரூபாய், குழந்தைகள் காலை உணவு திட்டம், மகளிர் இலவச பேருந்து பயணம்,வருமுன் காப்போம் மருத்துவ வசதிகளை மக்களைத் தேடிக் கொண்டு போய் சேர்க்கும் திட்டங்கள் என பல திட்டங்களை செய்து வரும் தமிழக முதல்வரின் மகத்தான சாதனைகள் சொல்லிக்கொண்டே போகலாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகத்தான வெற்றியை நீலகிரி வேட்பாளர் ஆ இராசா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்யுங்கள் என்று சிறப்புரையாற்றி இதுவரை நீலகிரி மாவட்டத்திற்கு அவர் செய்த பல நல் திட்டங்களை பாடல் வழியாக பாடி வாக்குகளை சேகரித்தார், உடன் உதகை நகராட்சி தலைவர் வானேஸ்வரி, நகர மன்ற உறுப்பினர்கள் ரகுபதி, பிரியா, நாகமணி , மேரி ப்லோவினா மார்டின், கார்டன் கிருஷ்ணன், செல்வராஜ், கீதா மற்றும் மகளிர் அணியினர் லிசா பிரேமா கண்ணகி கோபி,மஞ்சு குமார் மற்றும் திமுக கழகத் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பு செய்தனர்