ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை மீனவ அமைப்பினர் குற்றச்சாட்டு.

இன்று ராமநாதபுரம் மாவட்ட கடல் தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் அந்த அமைப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், மண்டபம் விசைப்படகுகள் அரசின் சட்ட விதிமுறைகளை மீறி கரையோர மீன்பிடிப் பில் ஈடுபடுவதை தடுத்து கரையோர மீன்பிடிப்பை மட்டுமே நம்பி வாழும் கரைவலை மற்றும் சிறு தொழில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். தனுஷ்கோடி தெற்கு கடல் பகுதியில் பாரம்பரியமான கரைவலை தோணி நாட்டுப்படகு மற்றும் சிறு தொழில் மீன்பிடிப்பிற்கு மிகப்பெரும் அளவில் கேடுவிளைவிக்கும் வகையில் இரட்டைமடி மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மண்டபம் மற்றும் பாம்பன் விசைப்படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், கடல்வளத்தையும், மீன்வளத்தையும் முற்றாக அழிப்பதுடன் இலங்கை கடற்படையின் நம் மீனவர்கள் மீதான கைது நடவடிக்கைக்கும் காரணமான இரட்டைமடி மீன்பிடிப்பு இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தடையின்றி நடைபெறுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இரட்டைமடி, சுருக்குமடி, போன்ற அரசால் தடை செய்யப்பட்ட சட்ட விரோத மீன்பிடிப்புகள் தொடர மீன்வளத்துறையின் அனைத்து மட்டத்திலும் முறைகேடாக பண பரிமாற்றம் நடைபெறுவது குறித்து பொது விசாரணைக்கு உத்தர விட வலியுறுத்தியும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக, மாதந்தோறும் நடைபெற வேண்டிய மாவட்ட ஆட்சியரின் மீனவர் குறைதீர்க்கும் நாள் நமது மாவட்ட மீன்வளத் துறை மீது கடுமையான விமர்சனங்கள் வரும்போதெல்லாமே தொடர்ந்து பல ஆண்டு களாக இக்கூட்டம் திட்டமிட்டே நடத்தப்படாமல் தவிர்ப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள், மாதந்தோறும் மீனவர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.