கோவையில் 2 வாலிபர்களை ஓட ஓட துரத்தி அரிவாளல் வெட்டிய ரவுடி கும்பல் – பீதியில் மக்கள்..!

கோவை ரத்தினபுரி பக்தவச்சலம் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ரஞ்சித் (வயது 23) டான்ஸ் மாஸ்டர் . இவர் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் கஞ்சா, பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது நண்பர் கணபதி போலீஸ் குடியிருப்பு , வ.உ சி நகரை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகன் நிதிஷ்குமார் ( வயது 21) இவர் மீது ரத்தினபுரி காவல் நிலையத்தில் கஞ்சா உள்பட பல்வேறு வழக்கில் உள்ளன. இந்த நிலையில் ரஞ்சித் மீதான பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. அது போன்று நித்திஷ் மீதான வழக்கு கோவையில் உள்ள இன்றியமைதா பண்டங்கள் மற்றும் போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2 பேர்மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது .இதனால் கோர்ட்டில் ஆஜராக ரஞ்சித் குமார், நித்தீஷ்குமார், மற்றும்அவர்களின் நண்பரான ரத்தினபுரியைசேர்ந்த சேர்ந்த கார்த்திக் ( வயது 23 ) ஆகியோர் காலையில் கோவை கோர்ட்டுக்கு மோட்டார் சைக்கிள் வந்தனர். பின்னர் அவர்கள் வழக்குகள் தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகி விட்டு வீடு திரும்பினார் .3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ராம் நகரில் உள்ள ராமர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த 2 மோட்டார் சைக்கிள் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கையில் கத்தி அரிவாள்களுடன் திடீரென துரத்தினர் . இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் குமார் உட்பட 3 பேரும் அவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். அவர்கள் ராம் நகரில் உள்ள செங்குப்த்தா வீதி அருகே சென்றபோது அந்த கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது. இதனால் நிலை தடுமாறிய 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர். உடனே அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து அவர்களை சுற்றி வளைத்தது.. இதனால்நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். கீழே விழுந்த 3 பேரும் எழுந்து ஓடினார்கள். இருந்தபோதிலும் அந்த கும்பல் அவர்களை விடாமல் துரத்திச் சென்றது. இதில் கார்த்திக் தப்பி ஓடிவிட்டார் .ஆனால் ரஞ்சித் குமார் நித்திஷ் ஆகியோரை சுற்றி வளைத்த அந்த கும்பல் சரமரியாக அரிவாளால் வெட்டினர் . இதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பல் 2 பேரை வெட்டியதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்களை திரண்டு வருவதை பார்த்ததும் மோட்டார் சைக்கிள் ஏரி தப்பி சென்றுவிட்டனர் .இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.தப்பி ஓடிய  6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது . இவர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் சினிமாவில் வருவது போல நடந்த சம்பவம் கோவை நகர மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.கோவையில் சில நாட்களாக ஒடுக்கப்பட்டிருந்த ரவுடிகள் அட்டகாசம் மீண்டும் தலை தூக்க தொடங்கிவிட்டதோ? என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்..