கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் சக்தி விநாயகர் நகரை சேர்ந்தவர் வேணுகோபால் ( வயது 71)ஓய்வு பெற்ற மில் தொழிலாளி. இவர் கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தனது மனைவியுடன் சென்றிருந்தார். 19ஆம் தேதி வந்த போது வீட்டில் பின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பணம் ரூ 25 ஆயிரம், 5 கை கடிகாரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வேணுகோபால் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர்தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்,
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0